திருமண நாள் காணும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
கடவுளின் கருணையால் இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் பரிவன்போடும் அன்யோன்யமாக வாழ எல்லாம் வல்ல அந்த தெய்வம் உங்களை துணை நின்று நடத்தட்டும்.
இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாளாக அமையட்டும்!
உன் வாழ்க்கையின் மிக முக்கிய தினமான இந்த திருமண நாளில் தம்பதியர் நீங்கள் இருவரும் இன்று போலவே எந்த நாளும் இளமையோடும் அளவில்லாத ஆரோக்கியமுடனும் வற்றாத விளை நிலங்கள் போல மக்கட்செல்வங்களை பெற்று சகல தொழில் வளங்களிலும் முன்னேறி வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய மனமார வாழ்த்துகிறேன்.
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு
திருமணம்..! என்றும்
இன்பத்தோடு வாழ என்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..! நீங்கள் இருவரும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.